வடமதுரை அருகே ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்
வடமதுரை அருகே பில்லமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை காளைகள் நாலாப்புறமாக சிதறவிட்டு பந்தாடின. இதில் காளை முட்டியதில் வாலிபர் குடல் சரிந்தது. போலீஸ்காரர் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
வடமதுரை:

ஜல்லிக்கட்டு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பில்லமநாயக்கன்பட்டியில் பிரசித்திபெற்ற கதிர்நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவையொட்டி பில்லமநாயக்கன்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஊர் பொதுமக்கள் சார்பில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஒரு லட்சம் வாழைப்பழங்களை சூறையாடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் காலை 7.40 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த போட்டியை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சீறிப்பாய்ந்த காளைகள்
ஜல்லிக்கட்டு தொடங்கியவுடன் முதலில் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பிறகு திண்டுக்கல், திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 700-க்கும் மேற்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்க முயன்றனர்.
இதில் சில காளைகள் பிடிபட்டன. பல்வேறு காளைகள் சிக்காமல் மாடுபிடி வீரர்களுக்கு போக்குகாட்டின. சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. மேலும் சில காளைகள், தன்னை அடக்க வந்த மாடுபிடி வீரர்களை நாலாப்புறமாக சிதறடித்து பந்தாடின. இருப்பினும் மாடுபிடி வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி, தங்களது வீரத்தை பறைசாற்றினர்.
ஹெல்மெட் பரிசு
இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, தங்கச்சங்கிலி, தங்க காசு, வெள்ளி காசு, பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. சிலருக்கு ஆடுகள் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் போட்டியில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் என 1,200 பேருக்கு விழாக்குழுவினர் சார்பில் ஹெல்மெட் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாலிபர் குடல் சரிந்தது
இதற்கிடையே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 16 பேர், பார்வையாளர்கள் 7 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 7 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் என 31 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு போட்டி நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் திண்டுக்கல் ரெண்டலபாறையை சேர்ந்த மாடுபிடி வீரரான சகோபுராஜாவை (35) காளை முட்டியதில் குடல் சரிந்தது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், வடமதுரை இன்ஸ்பெக்டர் தெய்வம் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story