ஊட்டியில் குப்பைகளை சேகரிக்க புதிய திட்டம் நகராட்சி அதிகாரிகள் தகவல்


ஊட்டியில் குப்பைகளை சேகரிக்க புதிய திட்டம் நகராட்சி அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 March 2022 8:36 PM IST (Updated: 9 March 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் விடுபடாமல் குப்பைகளை சேகரிக்க புதிய திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி

ஊட்டியில் விடுபடாமல் குப்பைகளை சேகரிக்க புதிய திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

குப்பைகள் சேகரிப்பு 

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் மட்டுமின்றி ஓட்டல்கள், 700-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இருக்கிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.

பின்னர் அந்த குப்பைகள் தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப ்படுகிறது. அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப் படுகிறது. மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய திட்டம் அமல்

ஊட்டியில் குப்பைகள் தேங்காமலும், விடுபடாமல் அனைத்து பகுதிகளிலும் தினமும் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக குப்பைகளை சேகரிக்க புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

அதாவது நகராட்சியில் குப்பைகள் சேகரிக்க பயன்படுத்தப்படும் 21 வாகனங்கள் முன்பு வரைபடம் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதில் தினமும் குப்பைகள் சேகரிக்க வேண்டிய இடங்களின் பெயர், சாலை மார்க்கம், நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

அதன்படி வாகனங் களில் தூய்மைப் பணியாளர்கள் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் குப்பைகளை குறிப்பிட்ட நேரத்தில் சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகரிகள் கூறியதாவது:-

அதிகாரிகள் கண்காணிப்பு

ஊட்டி நகராட்சியில் 7 மண்டலங்களில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 2 மணி முதல் 5 மணி வரையும் குப்பைகள் சேகரிக்கப் பட்டு வருகிறது. 

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பழக்கழிவுகள், காய்கறி கழிவுகளை சேகரிக்க 2 லாரிகள் உள்ளன. தினமும் 30 டன் குப்பைகள் சேகரமாகிறது. நகராட்சி வாகனங்களில் வரைபடம் மூலம் குடியிருப்புகளுக்கு சென்று எந்த பகுதியும் விடுபடாமல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. 

மேலும் சம்பந்தப்பட்ட நேரத்தில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக் கிறார்களா என்று அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை வழங்காமல் திறந்தவெளி, நீர்நிலைகளில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story