தோடர் எம்பிராய்டரியை சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் மகளிர் சக்தி விருது பெற்ற பெண்கள் பேட்டி
தோடர் எம்பிராய்டரியை சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்று மகளிர் சக்தி விருது பெற்ற பெண்கள் கூறினார்கள்.
ஊட்டி
தோடர் எம்பிராய்டரியை சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்று மகளிர் சக்தி விருது பெற்ற பெண்கள் கூறினார்கள்.
மகளிர் சக்தி விருது
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், 2020-ம் ஆண்டுக்கான மகளிர் சக்தி விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது.
விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு தொழில் முனைவோர், விவசாயம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், சமூக பணி உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் பெண்களுக்கு மகளிர் சக்தி விருதை வழங்கினார்.
இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெட்டுமந்து பகுதியை சேர்ந்த தோடர் இன பெண்களான தேஜம்மாள், ஜெயாமுத்து ஆகிய 2 பேருக்கும் விருது வழங்கப்பட்டது. அவர்கள் பாரம்பரிய உடையணிந்து ஜனாதிபதியிடம் விருதை பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து தேஜம்மாள், ஜெயாமுத்து ஆகியோர் கூறியதாவது:-
சந்தைப்படுத்த உதவி
நாங்கள் பாரம்பரியம் மாறாமல் கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது மூதாதையர்கள் தோடர் எம்பிராய்டரி குறித்து கற்றுகொடுத்தனர்.
பூ வேலைப்பாடு மிகுந்த கைபின்னல் மூலம் முகக்கவசம், கை பை, சால்வை, கைக்குட்டை, செல்போன் கவர், போர்வை உள்பட பல்வேறு எம்பிராய்டரி துணி வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்.
இதற்காக கரூரில் இருந்து நூல் வாங்கி எம்பிராய்டரியை தயாரித்து சுற்றுலா தலங்களில் வைத்து விற்பனை செய்கிறோம். புவிசார் குறியீடு பெய்ய தோடர் எம்பிராய்டரியை சந்தைப்படுத்த அரசு உதவினால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் தோடர் அல்லாதவர்கள் இதுபோன்ற வகைகளை உற்பத்தி செய்வதால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story