தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 March 2022 12:15 AM IST (Updated: 9 March 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வாய்மேடு:-

தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

ஒன்றியக்குழு கூட்டம்

நாகை மாவட்டம் தலைஞாயிறில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- 
ஜெகதீஷ் (துணைத்தலைவர்):- உம்பளச்சேரி பகுதியில் பொது மயான கட்டிடம் கட்ட வேண்டும். 
ஞானசேகரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- கொத்தங்குடி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். 
முத்துலட்சுமி (அ.தி.மு.க.):- பாங்கல் ஊராட்சியில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு மயான கட்டிடம் கட்டித்தர வேண்டும். 

குடிநீர் பற்றாக்குறை

மாசிலாமணி (தி.மு.க.):- கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும். 
கஸ்தூரி (தி.மு.க.):- வானவன் மகாதேவி கச்சவெளிப்பகுதியில் சமுதாய கூடம் கட்ட வேண்டும். 
செல்வி (தி.மு.க.):- நீர்முளை பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் சரிவர செயல்படவில்லை. இதனை சரி செய்து குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், அனைத்து பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரம்யா (அ.தி.மு.க.):- பண்ணத்தெரு ஊராட்சியில் மயான சாலை, மயான கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும் ஊராட்சி முழுவதும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். 

படிப்படியாக...

மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு):- காடந்தேத்தி ஊராட்சியில் மயான சாலை மயான கட்டிடம் புதிதாக கட்டித்தர வேண்டும். 
உதயகுமார் (தி.மு.க.):- நாலுவேதபதி மேலத்தெரு பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும். 
தீபா (அ.தி.மு.க.):- அவரிக்காடு கடைத்தெரு பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டும். 
தமிழரசி (தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். முக்கியமாக தலைஞாயிறு ஒன்றியம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story