தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே சித்தலூரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை, தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந் தேதி மகாசிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினசரி மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில், நேற்று காலை மணிமுக்தா ஆற்றில் இருந்து பூங்கரகம் அலங்கரித்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, காளி வேடத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து, அம்மன் பல்லக்கில் எழுந்தருள, மணிமுக்தா ஆற்றின் மயானபகுதிக்கு பக்தர்கள் சுமந்து சென்றனர். அங்கு மயானத்தில் வைத்து படையலிட்டு, சுண்டலை வாரி இறைத்து மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அறநிலைய துறையினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story