திருக்கோவிலூரில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும் கால்நடை கள ஆய்வு மைய கட்டிட பணியை அதிகாரிகள் ஆய்வு


திருக்கோவிலூரில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும் கால்நடை கள ஆய்வு மைய கட்டிட பணியை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 9 March 2022 10:15 PM IST (Updated: 9 March 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும் கால்நடை கள ஆய்வு மைய கட்டிட பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.


திருக்கோயிலூர், 

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் தமிழ்நாடு அரசு கால்நடை மற்றும் பராமரிப்பு துறையின் கீழ் ரூ.1 கோடியில் கால்நடை கள ஆய்வு மையம் மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை பொதுப்பணித்துறையின் திருவண்ணாமலை செயற்பொறியாளர் பிரமிளா, கள்ளக்குறிச்சி மாவட்ட உட்கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், உளுந்தூர்பேட்டை உதவி பொறியாளர் ஷர்மா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது, அங்கிருந்த கட்டிட ஒப்பந்ததாரரான ஏ. எஸ். ஆர். கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிர்வாகி என்ஜினீயர் எஸ். பாரதியிடம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

தொடர்ந்து, திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ரூ.21 லட்சம் செலவில் நடைபெறவுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தையும் அவர்கள் பார்வையிட்டு, கட்டிடம் கட்டும்பணியை உடனடியாக தொடங்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினர்.

Next Story