திருக்கோவிலூர் நகராட்சியில் 10 இடங்களில் குப்பை தொட்டிகள் அமைப்பு
திருக்கோவிலூர் நகராட்சியில் 10 இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் ஐ.ஆர். கோவிந்தராஜ், அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதில், 2-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகள் அமைக்கும் பணியை உடன் செய்வேன் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, ஐ.ஆர். கோவிந்தராஜ் கவுன்சிலராக பொறுப்பேற்றவுடன், வார்டு பகுதியில் 10 இடங்களில் குப்பை தொட்டிகளை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story