கத்தரிப்புலம் கிராமத்தில் மண் சாலை தார் சாலையாக மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கத்தரிப்புலம் கிராமத்தில் மண் சாலை தார்ச்சாலையாக மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்
வேதாரண்யம்:-
கத்தரிப்புலம் கிராமத்தில் மண் சாலை தார்ச்சாலையாக மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மண் சாலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் கிராமத்தில் கோவில் குத்தகை வடக்கில் உள்ள வடகாடு சாலை கடந்த பல ஆண்டுகளாக மண்சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையால் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார்கள்.
மழை காலத்தில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதாலும், குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாலும் சாலையை பயன்படுத்த முடியவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்கவில்லை
மண் சாைலயில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைத்து வடிகால் வசதி செய்து தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும், ஒன்றியக்குழு தலைவருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.
Related Tags :
Next Story