மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 9 March 2022 10:45 PM IST (Updated: 9 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளியணை, 
வெள்ளியணை அருகே உள்ள கே.பிச்சம்பட்டி கிராமம் துறையூரை சேர்ந்தவர் பாக்கியம்மாள் (வயது 63). இவருடைய கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனியாக வசித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6-ந்் வீட்டில் இருந்த அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.  இதனால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாக்கியம்மாள் சிகிச்சை பலனிற்றி இறந்தார். இந்த தற்கொலை குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story