வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2022 10:45 PM IST (Updated: 9 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

ஒடிசா மாநிலம் தேவபூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் பெஹரா (வயது 36). இவர் காட்பாடியில் உள்ள தனியார் கொசுவலை தயாரிக்கும் கம்பெனியில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாக வில்லை. இதன் காரணமாக இவருக்கும், இவர் குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், காட்பாடியில் தங்கி இருந்த வாடகை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த, காட்பாடி போலீசார் அங்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story