மகளிர் தின விழா கொண்டாட்டம்
தேனி நாடார் சரசுவதி கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
தேனி:
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காளிராஜ், இணைச் செயலாளர்கள் சுப்புராஜ், வன்னியராஜன், கல்லூரி விடுதி செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார்.
விழாவில் உறவின்முறை மற்றும் கல்லூரி நிர்வாகிகளின் குடும்பங்களை சேர்ந்த லட்சுமிபிரபா முருகன், முத்துசெல்வி ராஜமோகன், ராமஜெயம் பழனியப்பன், செந்தியம்மாள் சேகர், சுலோச்சனா காளிராஜ், பெரியநாயகி சுப்புராஜ், மகேஸ்வரி வன்னியராஜன் ஆகியோருக்கு சாதனை பெண்மணிகள் விருது வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரி துணை முதல்வர் சுசீலா சங்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story