கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அசோக்குமார் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணாரெட்டி, அண்ணா தொழிற் சங்க பேரவைத்தலைவர் ராசு, பொருளாளர் அப்துல் அமீது, மாநில துணை செயலாளர் தமிழரசு, துணை தலைவர் கோவிந்தராஜ், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவில் தேர்தெடுக்கப்பட்ட பணிமனைக்கான நிர்வாகிகளின் அங்கீகரிக்கப்பட்ட கடிதத்தை தெரிந்தெடுக்கப்பட்ட 56 நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதில், மாநிலத்தலைவர் தாடி மாராசு, மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜி, மாநில பொருளாளர் அப்துல் அமீது, அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் பால் வளத்தலைவர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முனிவெங்கடப்பன், சமரசம், செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நகர துணைச் செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய நிர்வாகிகள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், பையூர் ரவி, வேடி, சக்கரவர்த்தி, முருகன், தேவராசன், கிருஷ்ணன், ஆவின் தலைவர் குப்புசாமி, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் மோகன், வேலன், மக்பூல், முரளி பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story