சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை   தந்தை கைது
x
தினத்தந்தி 9 March 2022 11:00 PM IST (Updated: 9 March 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவளது தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி;
மன்னார்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவளது தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 
வெளிநாட்டில் வேலை
மன்னார்குடியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மகள் 14 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சிறுமியின் தாய் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். இதனால் அவர் தனது மகளை கணவரிடம் விட்டு சென்றார். கடந்த 6 மாதங்களாக சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சிறுமியின் தாய் சிறுமியை பார்க்க சென்றார். அப்போது சிறுமி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். இதனால் சிறுமியிடம் அவரது தாய் விசாரித்தார். அப்போது சிறுமிக்கு அவளது தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 
கைது
இது குறித்த புகாரின் பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story