முதல்-அமைச்சர் முகஸ்டாலின் பிறந்தநாள் 690 பேருக்கு நல உதவிகள் அமைச்சர் காந்தி வழங்கினார்


முதல்-அமைச்சர் முகஸ்டாலின் பிறந்தநாள் 690 பேருக்கு நல உதவிகள்  அமைச்சர் காந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 9 March 2022 11:13 PM IST (Updated: 9 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் முதல்அமைச்சர் முகஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி 690 பேருக்கு நல உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில், கிழக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, 690 பேருக்கு நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் பிரியாணி விருந்து வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் தணிகை கருணாநிதி, துணை அமைப்பாளர்கள் மோதிலால், வள்ளியம்மாள், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் நவாப் வரவேற்றார்.  இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, 690 பேருக்கு நல உதவிகளை வழங்கி பேசினார். கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன், பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 
இதில் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்மன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராசு, கோவிந்தன், கோவிந்தசாமி, எக்கூர் செல்வம், தேங்காய் சுப்பிரமணி, வசந்தரசு, பேரூர் செயலாளர்கள் பாபு, பாபு சிவக்குமார், காவேரிப்பட்டணம் தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ்.சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாற்று கட்சிகளை சேர்ந்த 400 பேர் அமைச்சர் காந்தி முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். முடிவில், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் சிறுமலர் ராஜசேகர், ஆனந்தன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

Next Story