தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தின விழா
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி மேலாளர் விஜயா வரவேற்று பேசினார். விழாவையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் மியூசிக்கல் சேர், லெமன் ஸ்பூன், பலூன் ஊதி வெடித்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், நடனம் என்பது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகராட்சி கவுன்சிலர்கள் சத்யா முல்லைவேந்தன், ராஜாத்தி ரவி, உமையாம்பிகை நாகேந்திரன், அம்பிகா மாதையன், செல்வி திருப்பதி, கவிதா யுவராஜ், நகராட்சி உதவி பொறியாளர் சரவண பாபு, வருவாய் ஆய்வாளர் மாதையன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள், நகர் நல மையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
மொரப்பூர்
மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன் தலைமை தாங்கி கேக் வெட்டி வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், மதலை முத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செண்பகம், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி வரவேற்று பேசினார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றிச்செல்வன் துரை, சரிதா ராஜ், உமாராணி உலகநாதன், தமிழ்ச்செல்வி ரங்கநாதன், ஜெயந்தி அழகரசு, மாசிலாமணி சாந்தி வெள்ளையன், பழனியம்மாள் முனிராஜ், ஊராட்சி செயலாளர்கள் சிவகுமார், நல்லாதேவி மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூர்
கடத்தூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் நபாா்டு வங்கி, ஆா்.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நபாா்டு வங்கி வளா்ச்சி மாவட்ட மேலாளா் பிரவின்பாபு தலைமை தாங்கினாா். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் அன்புசெல்வி, ஆலபாடி மாடுகள் ஆராய்ச்சி மைய பேராசிரியா் வசந்தகுமாா், குன்டலப்பட்டி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தலைவா் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன இயக்குனா் தா்மலிங்கம் வரவேற்று பேசினாா்.
பாப்பாரப்பட்டி கே.வி.கே. உதவி பேராசிரியா் வெண்ணிலா, தமிழ்நாடு கிராம வங்கி ஒடசல்பட்டி கிளை மேலாளா் ரமேஸ் ஆகியோா் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாடு கிராம வங்கி ஒடசல்பட்டி கிளை சாா்பில் 10 சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. முடிவில் ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நன்றி கூறினாா்.
Related Tags :
Next Story