தர்மபுரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,:
தர்மபுரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் சாராயம், போதை பொருட்கள், போலி மது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் தர்மபுரி பைபாஸ் ரோடு வழியாக சென்று இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கள்ளச்சாராயம், போதை பொருட்கள், போலி மது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் மாணவ-மாணவிகள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
கலை நிகழ்ச்சி
முன்னதாக தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அரசு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், கலால் உதவி ஆணையர் தணிகாச்சலம், மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ சோமசுந்தரம், தாசில்தார் ராஜராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story