தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2022 11:14 PM IST (Updated: 9 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,:
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், செயலாளர் சுதர்சனன், முனிசிபல் பொது பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
 நிலுவைத்தொகை
ஆர்ப்பாட்டத்தில், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி பதிவேடு பராமரிக்க வேண்டும். கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். பாதுகாப்பு கருவிகளை வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.
ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ரூ.250 ஊதியத்தில் பணிபுரியும் கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தபடி ரூ.2,600 ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.
கோஷங்கள்
30 ஆண்டுகளாக ஊராட்சிகளில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story