வெள்ளக்கல்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
வெள்ளக்கல்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே வெள்ளக்கல்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத இறுதியில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தேர்த்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மனை வைத்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய பகுதிகள் வழியாக சென்ற தேர் முடிவில் நிலையை வந்தடைந்தது. இன்று (வியாழக்கிழமை) சத்தாபரணம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story