நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது நாமக்கல்-பொதுமக்கள் மகிழ்ச்சி


நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது நாமக்கல்-பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 March 2022 11:15 PM IST (Updated: 9 March 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
நேற்று மாவட்டத்தில் 9 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 67 ஆயிரத்து 430 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் உயிரிழந்த நிலையில், 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு சிலர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story