பங்குனி உத்திர விழாவையொட்டி வசந்த உற்சவம்


பங்குனி உத்திர விழாவையொட்டி வசந்த உற்சவம்
x
தினத்தந்தி 9 March 2022 11:21 PM IST (Updated: 9 March 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வசந்த உற்சவம் நடந்தது.

திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வசந்த உற்சவம் நடந்தது.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாள்தோறும் உற்சவம், சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேரை அலங்கரிக்கும் குதிரை, யாழி உள்ளிட்ட பொம்மைகளும் புதிதாக தயார் செய்யப்பட்டு வர்ணம் பூசும் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
4 வடங்கள்
மேலும் ஆழித்தேரின் முன் பகுதியில் இணைப்பதற்கான பிரமாண்டமான 4 வடங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு, சிரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேர் அலங்கரிக்கப்பட்டு, தேரோட்டத்துக்கு முதல் நாள் ஆழித்தேரில் வடங்கள் இணைக்கப்படும். இதேபோல் தேர் அலங்கரிக்கும் வண்ணமிகு சீலைகள் புதிதாக வாங்கப்பட்டு தயாராக உள்ளது. தேரோட்டத்திற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வசந்த உற்சவம்
பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி தியாகராஜர் வசந்த உற்சவம் நேற்று நடைபெற்றது. மேலும் திருவிழாவையொட்டி எட்டு திசை கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி கோவில் திசைக்கு ஒன்றாக 8 கொடி மரங்கள் அமைத்து, அந்தந்த திசைக்கான தெய்வங்களை வணங்கி கொடியேற்றி வழிபாடு நடந்தது.  இரவு சந்திரசேகரர் வீதிஉலா நிகழ்ச்சி் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story