தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு


தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 March 2022 11:24 PM IST (Updated: 9 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்தது.

தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 775 கிலோவாக இருந்த பட்டுக்கூடு வரத்து நேற்று 1,945 கிலோவாக அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக ரூ.891, குறைந்தபட்சமாக ரூ.796, சராசரியாக ரூ.855.50 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 334 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Next Story