நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது-பா.ம.க. சார்பில் மனு


நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது-பா.ம.க. சார்பில் மனு
x
தினத்தந்தி 9 March 2022 11:28 PM IST (Updated: 9 March 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அரியலூர்,
பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜேந்திரன் பெரம்பலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார்.  இதேபோல்ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமயிலான நிர்வாகிகள்திரையரங்கு உரிமையாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், வக்கீல் சந்துரு உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் உண்மையான பெயரில் வெளியிடப்பட்டது. ஆனால் மாற்று சமுதாயத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமியை குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் அந்த திரைப்படம் வெளிவந்தது. இதற்காக வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்காத வரை அவர் நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களில்  திரையிடக்கூடாது என்று பா.ம.க. சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளிவருகிற நிலையில், இந்த அறிவிப்பை பா.ம.க. நிர்வாகிகள் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரம்பலூரில் 2 திரையரங்குகளிலும், ெஜயங்கொண்டத்தில் 1 திரையரங்கிலும் நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதனால் அந்த திரையரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story