நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை தேடித்தந்த முதல் அமைச்சருக்கு நன்றி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை தேடித்தந்த முதல் அமைச்சருக்கு நன்றி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று மாலை மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், ஊராட்சிக்குழு செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கி, சமூகநீதி அடிப்படையில் ஏழை, எளியோரை பயனாளிகளாக தேர்வு செய்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 புதிய வீடுகள் வழங்கிடவும், மாவட்டத்திலுள்ள 10 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வது, இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், அரசுத்துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவிப்பது, சமத்துவபுரம் பகுதியில் தனித்தனி வீடுகளுக்கு கழிவுநீர் பகுதியில் சிறுபாலம் அமைத்தல் பணிக்கு ரூ.8.50 லட்சம், தார் சாலைக்கு ரூ.15.81 லட்சம் மதிப்பில் மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானிய நிதியில்இருந்து நிர்வாக அனுமதி வழங்குவது, லட்சுமிபுரம்- முண்டியம்பாக்கம் சாலையை இருவழிச்சாலையாக மாற்றியமைத்து பொதுமக்கள்பயன்பாட்டிற்கு விடுவதற்கு மாவட்ட கலெக்டர் மூலம் நெடுஞ்சாலைத்துறைக்கு முன்மொழிவு அனுப்புவது. விக்கிரவாண்டி பெரிய ஏரியை அகலப்படுத்தி தார்சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறைக்கு முன்மொழிவு அனுப்புவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை தேடித்தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story