மருத்துவ மாணவி ஆர்த்திகா பெற்றோருடன் கலெக்டரை சந்தித்து நன்றி


மருத்துவ மாணவி ஆர்த்திகா  பெற்றோருடன் கலெக்டரை சந்தித்து நன்றி
x
தினத்தந்தி 9 March 2022 11:47 PM IST (Updated: 9 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட மருத்துவ மாணவி ஆர்த்திகா, பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார்

மயிலாடுதுறை:
உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட மருத்துவ மாணவி ஆர்த்திகா, பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார்
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவி
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கோவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன்- கவிதா ஆகியோரின் மகள் ஆர்த்திகா உக்ரைன் நாட்டில் கார்கிவ் மாநிலத்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் உக்ரைன்- ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் சிக்கிக்கொண்ட மாணவி ஆர்த்திகா, தன்னை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஆனந்தன்-கவிதா தம்பதியர் மாவட்ட கலெக்டர் லலிதாவை நேரில் சந்தித்து தங்கள் மகள் ஆர்த்திகாவை மீட்டுத் தரும்படி கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி உக்ரைனில் இருந்து மாணவி ஆர்த்திகா சென்னைக்கு பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்.
கலெக்டருக்கு நன்றி
இதனையடுத்து நேற்று தனது பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாணவி ஆர்த்திகா, கலெக்டர் லலிதாவை நேரில் சந்தித்து தன்னை மீட்ட தமிழக முதல்-அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் உக்ரைன் நாட்டில் போர் நடந்தபோது மாணவி கார்த்திகா தான் நேரில் பார்த்த சம்பவங்கள் குறித்தும், அங்கு மருத்துவ மாணவிகள் பட்ட துயரங்கள் குறித்தும் கலெக்டரிடம் கூறினார்.. அப்போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story