செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்


செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 March 2022 12:36 AM IST (Updated: 10 March 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று வெம்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் மாமண்டூர் டி.ராஜி தலைமையில் நடைபெற்றது. 

துணைத்தலைவர் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன், ஏ.கோபாலகிருஷ்ணன், என்ஜினீயர் ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில், செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், ‘ஒன்றியத்திற்காக ஒதுக்கப்படும் பொது நிதியில் இருந்து எந்தவித வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளாமல் மொத்த பணத்தையும் டெங்கு காய்ச்சல் காரணம் காட்டி செலவிடுவது எந்தவிதத்தில் நியாயம். 

மஸ்தூர் பணியாளர்கள் கிராமங்களில் பணியாற்றினால் கிராம பஞ்சாயத்து நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டும். 

இனிமேல் ஒரு ரூபாய் கூட டெங்குப்பணி என்று கூறி பொது நிதியில் இருந்து பணம் எடுக்கக்கூடாது. கிராம சபை கூட்டங்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்களை அழைப்பதில்லை.

பஞ்சாயத்துகளில் பசுமை வீடு வழங்குவதில் பயனாளிகள் தேர்வு செய்யப்படும் போது ஒன்றிய கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசிப்பதில்லை. 

100 நாள் திட்டப்பணிகளின் வேலை நேரத்தை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். 

Next Story