கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்


கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 10 March 2022 12:38 AM IST (Updated: 10 March 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் ராமேசுவரத்தில் இருந்து 50 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் ராமேசுவரத்தில் இருந்து 50 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆலய திருவிழா
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவின் முதல் நாளான நாளை மாலை 5 மணி அளவில் ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படுகிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலிகள் நடைபெறுகின்றன. பின்னர் இரவு 8 மணி அளவில் புனித அந்தோணியார் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 
திருவிழாவில் இரண்டாவது நாளான நாளை மறுநாள் 11-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணி அளவில் திருவிழா திருப்பலி தொடங்குகின்றது. யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும் இந்த திருப்பலி 9 மணியுடன் முடிவடைகிறது.
50 பேருக்கு அனுமதி
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பக்தர்களும், தமிழகத்தில் இருந்து 50 பக்தர்களும் மட்டுமே கலந்து கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
நாளை நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இரண்டு விசைப்படகு, ஒரு நாட்டுப் படகு உள்ளிட்ட 3 படகுகளில் 50 பக்தர்கள் மட்டும் கச்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கின்றனர். 
கச்சத்தீவுக்கு செல்லும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளின் உறுதி தன்மை குறித்து நேற்று மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீன்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story