தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு


தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 March 2022 12:42 AM IST (Updated: 10 March 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேப்பந்தட்டை, 
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணனிடம் நேற்று திருவாலந்துறையை சேர்ந்த காந்தி (வயது 50) என்பவர் நேரில் சென்று பட்டா வழங்க வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். முறைப்படி மனு கொடுங்கள் விசாரணை செய்து தருகிறோம் என தாசில்தார் கூறியும் கேட்கவில்லை. இதனைத்தொடர்ந்து தாசில்தார் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story