புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்


புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
x
தினத்தந்தி 10 March 2022 12:45 AM IST (Updated: 10 March 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் உமாமகேஸ்வரி, ஊராட்சி செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினர். மேலும் சிலர் தங்களது பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளுக்கு தங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர். ேமலும் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமைக்கு ரூ.7 கோடிக்கு பணிகள் வந்துள்ளதாகவும். இதனை 20 வார்டுகளுக்கு ஒதுக்கி விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story