இருளர் சமுதாய மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இருளர் சமுதாய மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த ஜானகாபுரத்தில் இருளர் சமுதய மக்களுக்கு உதயம் சமுதாய காவல் திட்டம் சார்பில் கொத்தடிமை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நிஷாந்தி சீனிவாசன் தலைமை தாங்கினார். சர்வதேச நீதிக்குழும உறுப்பினர் ரூபன் முன்னிலை வகித்தார். சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கலந்து கொண்டு இருளர் சமுதாயத்தில் பல்வேறு இடங்களில் கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டு அவர்களுக்கு அரசு தரப்பில் பல்வேறு நல திட்டங்களை வழங்கியது குறித்தும், இனிவரும் காலங்களில் கொத்தடிமைகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக நாடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story