குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில், ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை பிடித்து சிறையில் அடைத்தனர். ஆற்காடு கனகசபாபதி தெருவைச் சேர்ந்த குமரேசன் (வயது 24) என்பவரை கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் குமரேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story