ஆற்காடு அருகே சாமி ஊர்வலத்தின்போது பள்ளி தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி


ஆற்காடு அருகே சாமி ஊர்வலத்தின்போது பள்ளி தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 10 March 2022 12:50 AM IST (Updated: 10 March 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே சாமி ஊர்வலத்தின்போது தனியார் பள்ளி தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

ஆற்காடு

ஆற்காடு அருகே சாமி ஊர்வலத்தின்போது தனியார் பள்ளி தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

வனபோஜன திருவிழா 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தில் ஸ்ரீ தணிகை அம்மன் வனபோஜன திருவிழா உற்சவம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள கிராமத்தின் எல்லைகளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று மாலை 6.30 மணி அளவில் கீழ்குப்பம் எல்லை அருகே ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஊர்வலத்திற்கு தடையாக இருந்த அங்குள்ள தனியார் பள்ளியின் சுற்றுசுவரை இடித்துவிட்டு பள்ளி வளாகத்தின் வழியாக வெளியே செல்ல முற்பட்டுள்ளனர் அப்போது நுழைவாயில் உள்ள தூணின் மீது அலங்கரிக்கப்பட்ட சாமியின் ஒரு பகுதி உரசி உள்ளது. 

இதில் பள்ளியின் முன் பகுதியில் உள்ள தூண் இடிந்து கீழே விழுந்துள்ளது. சாமி ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த சம்பவத்தில் கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 25),  அவரது தந்தை மண்ணு (55) உள்ளிட்ட 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர்.

ஒருவர் பலி

அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ் பரிதாபமாக இறந்து விட்டார். மண்ணு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இச்சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story