காவேரிப்பாக்கம் அருகே பதுக்கி வைத்திருந்த 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காவேரிப்பாக்கம் அருகே பதுக்கி வைத்திருந்த 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கத்தை அடுத்த துறைபெரும்பாக்கம் கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை செய்வதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில், தலைமை காவலர்கள், பிரேம்குமார், குணசேகரன், யுவக்குமார், ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு முட்புதரில், சுமார் 4½ டன் ரேஷன் அரிசி மூட்டை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சதீசிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story