தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 24 துணை சுகாதார நிலையங்களில் கட்டுமான பணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 24 துணை சுகாதார நிலையங்களில் கட்டுமான பணி
திருப்பத்தூர்
சுகாதார பணிகள் இணை இயக்குனர் கே.எஸ்.டி.சுரேஷ், திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குனர் டி.ஆர். செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 15-வது நிதி குழு மானியத்தில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆம்பூர் நகர பகுதியில்-1, வாணியம்பாடி நகர பகுதியில்-2, ஜோலார்பேட்டை நகர பகுதியில்-1 உள்ளிட்ட பகுதிகளில் 24 துணை சுகாதார நிலையங்களில் கட்டுமான பணி நடந்து வருகிறது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை வட்டாரத்தில் இடையம்பட்டி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பொது சுகாதார மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு அனைத்து விதமான மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கவும், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 மருத்துவர்கள் மேற்படிப்பிற்காக சென்றுள்ளனர். 15-ந்தேதி நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். இருப்பினும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக் கவசம் அணிவது மிகவும் பாதுகாப்பான வழியாகும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story