10 மூட்டை பாக்கெட் சாராயம் பறிமுதல்
வாணியம்பாடியில் 10 மூட்டை சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராய விற்பனையை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி, சாராயம் விற்பனை செய்து வந்த கொட்டகைக்கு தீ வைத்து கொளுத்தினர்.
இதன் எதிரொலியாக சாராய விற்பனையை முற்றிலுமாக தடுத்து, சாராய விற்பனை கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேதாஜி நகர் லாலா ஏரி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது நேதாஜி நகர் பகுதியில் விற்பனைகாக 10 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
சாராய விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story