திருட்டுபோன மோட்டார் சைக்கிளை உடனடியாக மீட்ட போலீசாருக்கு பாராட்டு


திருட்டுபோன மோட்டார் சைக்கிளை உடனடியாக மீட்ட போலீசாருக்கு பாராட்டு
x

திருட்டுபோன மோட்டார் சைக்கிளை உடனடியாக மீட்ட போலீசாருக்கு பாராட்டு

வாணியம்பாடி

வாணியம்பாடி சென்னம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இதிரீஸ். இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். நியூடவுன் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தாயை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற அவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளை மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. 

மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த நிலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்தவழியாக ஒருவர் மோட்டார்சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவவ் லாலா ஏரி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பதும், அவர் தள்ளிக்கொண்டு வந்தது மருத்துவமனை வளாகத்தில் திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.திருட்டுப்போன மோட்டார்சைக்கிளை விரைந்து மீட்ட போலீசாரை வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் பாராட்டினார்.

Next Story