யோகாவில் மாணவி சாதனை
விருதுநகரில் யோகாவில் மாணவி சாதனை படைத்தார்.
விருதுநகர்,
விருதுநகர் அகிலா நகரை சேர்ந்த சுடலைவேலு-கலையரசி தம்பதியினரின் மகள் ராஜ ஸ்ரீ (வயது 10). இவர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் இம்மாணவி யோகாசனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிலையில் சாதனை படைக்கும் எண்ணத்துடன் கடந்த 7 மாதங்களாக வகுலஜராசனத்திலும், கண்ட பரசண்டாசனத்திலும் பயிற்சி பெற்றார். நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் இவர் டயரில் உடலை வளைத்து 100 மீட்டர் தூரத்திற்கு வகுலஜராசனம் மற்றும் கண்ட பரசண்டாசனத்தையும் இணைத்து சாதனை படைத்தார். நோபல் சாதனை பதிவில் இடம்பெற்ற மாணவியின் சாதனையை பாராட்டி விருதுநகர் வியாபாரி தொழிற்சங்க செயலாளர் வி.ஆர். முத்து பரிசும், சான்றிதழும் வழங்கினார்.
Related Tags :
Next Story