தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கிராத்தூர் அம்பலக்குளம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி அவற்றை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ்குமார், அம்பலகுளம்.
விபத்து அபாயம்
கணேசபுரத்தில் இருந்து கோட்டார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வளைவில் இடதுபுறமாக கழிவுநீர் ஓடையின் மீது தண்ணீர் வடிந்தோட கம்பிகளால் வலை போன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி பள்ளமாக காணப்படுவதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் விபத்து ஏற்படாத வகையில் அவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜே.காயத்ரி, வடசேரி.
தொற்றுநோய் பரவும் அபாயம்
காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சாமியார்மடம் பகுதியில் தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தையின் உள்ளே வியாபாரிகளின் வசதிக்காக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன் ெதாற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவறைகளை சுத்தம் செய்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.வசந்தகுமார், சாமியார்மடம்.
சேதமடைந்த மின்கம்பம்
வேர்க்கிளம்பி சந்திப்பில் இருந்து சாமியார்மடம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சாமியார்மடம் திரும்பும் பகுதியில் வலதுபுறம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த மின்கம்பத்ைத அகற்றி விட்டு புதிய கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாண் ரூபின்,
வேர்க்கிளம்பி.
வாகன ஓட்டிகள் அவதி
நாகா்ேகாவில் டி.வி.டி.காலனியில் இருந்து செந்தூரான்நகர் வழியாக சரலூருக்கு குறுக்கு சாலை ஒன்று செல்கிறது. இங்கு புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் நிரப்பப்பட்டு பல நாட்களாகிறது. அந்த பகுதியில் ஒரு பள்ளி உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.சுந்தர், டி.வி.டி.காலனி.
சீரமைக்க வேண்டும்
ராமன்புதூரில் இருந்து பொன்னப்பநாடார் காலனி வழியாக ஆயுத படை முகாம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காட்வின், நாகர்கோவில்.
Related Tags :
Next Story