விபத்தில் தொழிலாளி பலி
சாத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தூர்,
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் நடுவிற்பட்டி பகுதியை சேர்ந்த சரவணக்கண்ணன் (வயது 42). இவரது மைத்துனர் காளிமுத்து (43). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர்கள் இருவரும் எட்டயபுரத்தில் இருந்து விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். இவர்கள் கோவில்பட்டி - விருதுநகர் நான்கு வழி சாலையில், சாத்தூர் அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பியதில் நிலைதடுமாறி சாலையின் பக்கவாட்டில் மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாத்தூரில் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story