சேதமடைந்த குடிநீர் தொட்டி - பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த குடிநீர் தொட்டி - பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 March 2022 1:32 AM IST (Updated: 10 March 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே தவசிலிங்கபுத்தில் சேதமடைந்த குடிநீர் தொட்டி மற்றும் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே தவசிலிங்கபுத்தில் சேதமடைந்த குடிநீர் தொட்டி மற்றும் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி
விருதுநகர் அருகே மூளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது தவசிலிங்கபுரம் கிராமம். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. 
இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தான் மக்களுக்கு தண்ணீர் வினிேயாகம் செய்யப்படுகிறது. தாமிரபரணி தண்ணீர் கிடைப்பதற்கான குழாய்கள் பதிக்கப்படும் இன்னும் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல ஊரின் மையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. 
மின்வயர்கள் 
இதன் அருகே தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் உள்ளது. மகளிர் குழு கட்டிடமும் சேதமடைந்்து பயன்பாடின்றி உள்ளது. வடக்குத்தெருவில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே இந்த பகுதி பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை விரைவாக சீரமைக்க வேண்டும். சேதமடைந்த நிலையில் உள்ள மகளிர் குழு கட்டிடத்தை அகற்ற வேண்டும். அதேபோல சமுதாய கூடம் அமைப்பதுடன், வடக்குத்தெருவில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரிசெய்யவும், தாமிரபரணி தண்ணீரை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story