ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டு துப்புரவு பணி


ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டு துப்புரவு பணி
x
தினத்தந்தி 10 March 2022 1:35 AM IST (Updated: 10 March 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டு துப்புரவு பணியை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டு துப்புரவு பணியை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார். 
துப்புரவு பணி 
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் கூட்டு துப்புரவு பணி தொடங்கப்பட்டது. அதாவது இந்த வார்டுகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவிடாமல் நகராட்சி ஊழியர்களால் சுத்தம் செய்யும் கூட்டு துப்புரவு பணி தொடக்க விழா நடைபெற்றது. 
இந்த பணிகளை நகரசபை தலைவர் தங்கம் ரவி கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டு துப்புரவு பணி தொடங்கப்பட்டுள்ளது. 
சுத்தமாக வைக்க வேண்டும் 
இந்த பணி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நடைபெறும். பொதுமக்களும் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்து ெகாள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த நிகழ்ச்சியில் நகரசபை ஆணையர் மல்லிகா, சுகாதாரத்துறை நகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story