தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
வேகத்தடை வேண்டும்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் ராஜாமடம் தாய் வாய்க்காலும், முத்துப்பேட்டை சாலை சந்திக்கும் இடமும் உள்ளது. இந்த சாலையின் இரண்டு புறத்திலும் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் இருசக்கரவாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக வேகமாக சென்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை.
Related Tags :
Next Story