சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சப்தஸ்தான விழா
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலிலும், இணை கோவிலும், திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமுமான சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சப்தஸ்தான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தேவநாயகி அம்பாள், சக்கரவாகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அப்போது மேளதாளங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
21-ந்தேதி பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
இன்று (வியாழக்கிழமை) முதல் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி 21-ந்தேதியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்துள்னர்.
Related Tags :
Next Story