பள்ளி மாணவியை திருமணம் செய்தவர் கைது
தினத்தந்தி 10 March 2022 1:44 AM IST (Updated: 10 March 2022 1:44 AM IST)
Text Sizeசிவகாசி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கும், திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் முத்துராமலிங்கம் (வயது 25) என்பவருக்கும் கடந்த 4-ந்தேதி சிவகாசி அருகே ஒரு கோவிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சமூகநலத்துறை அதிகாரி ராஜேஸ்வரி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார், மணமகன் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தாா்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire