தரமற்ற கழிவறை கட்டினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-மந்திரி ஈசுவரப்பா எச்சரிக்கை
தரமற்ற கழிவறை கட்டினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி ஈசுவரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் பண்டப்பா காசம்பூர் கேட்ட கேள்விக்கு கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா பதிலளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெண்கள் திறந்தவெளி கழிவறை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை கொண்டு வந்தார். அவரது திட்டங்களில் இது முக்கியமானது.
கழிவறைகளை சரியான முறையில் இல்லாமல் தரம் குறைவாக அமைத்தால் அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகம் திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில், கழிவறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி நான் வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
Related Tags :
Next Story