வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
பூதப்பாண்டி அருேக வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருேக வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி சுதா (வயது29). இவர்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பணகுடியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று மாலையில் வீட்டுக்கு வந்த போது வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், அலமாரியில் இருந்த 8 பவுன் நகை, ரூ.7,500 பணம் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story