ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் காகித பயன்பாடு முற்றிலும் நிறுத்தம்-மந்திரி ஸ்ரீராமுலு
ஆர்டிஓஅலுவலகங்களில் காகித பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்டுவதாக மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் உறுப்பினர் ஹுலிகேரி கேட்ட கேள்விக்கு போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.) சேவைகளை மக்களுக்கு ஆன்லைன் மூலமாக வழங்குகிறோம். ஓட்டுனர் உரிமம் உள்பட அனைத்தும் ஆன்லைன் வழியாக வழங்கப்படுவதால், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் காகித பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருவதும் குறைந்துள்ளது.
விஜயாப்புரா, ராய்ச்சூர், கலபுரகி மாவட்டங்களில் உள்ள சில தாலுகாக்களில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. மாநில அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். சமூக நலத்துறையில் மாணவர் விடுதிகளை மாவட்ட தலைநகரங்களில் திறக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் உறுப்பினர் துகாராம், பல்லாரி மாவட்டம் சண்டூரில் விடுதி திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.
Related Tags :
Next Story