புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 March 2022 1:54 AM IST (Updated: 10 March 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
   சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் காலனி மேற்கு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி அந்த பகுதியில் தேங்கியுள்ளது. தேங்கிய நீரில் கொசுக்கள் உருவாகி தொற்றுேநாய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பஸ்நிலையத்தில் சுற்றி திரியும் நாய்கள் அங்கிருக்கும் பயணிகளை பயமுறுத்துவதோடு மட்டுமல்லாமல் சிலரை கடிக்கவும் செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் தெருநாய்களை அப்புறப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
சேதமடைந்த மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதிநகர் ரேஷன்கடை அருகே உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அருகில் புதிய மின்கம்பம் வைக்கப்பட்ட போதிலும் மின்இணைப்புகள் புதிய மின்கம்பத்திற்கு கொடுக்கப்படவில்லை. எனவே புதிய மின்கம்பத்திற்கு மின்இணைப்புகளை மாற்றி பழைய மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அடிப்படைவசதி வேண்டும் 
 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஸ்நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, பயணிகள் அமர இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தொற்றுநோய் பரவும் அபாயம் 
மதுரை கோச்சடை மெயின் ரோடு முத்தையா கோவில் 1-வது தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் தெருவில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பயணிகள் நிழற்குடை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விலக்கு ரோட்டில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளும், முதியவர்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் நலன்கருதி இங்கு நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பாலம் அமைக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கல்லல் ரோட்டின் அருகே உள்ள பாலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் முன் பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Next Story