சிங்கம்புணரியில் யூனியன் கூட்டம்
சிங்கம்புணரியில் யூனியன் கூட்டம் நடைபெற்றது
சிங்கம்புணரி
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் யூனியன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் அருளானந்தம் வரவேற்றார். இக்கூட்டத்தில் வரவு செலவு, பணிகள் குறித்த 18 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சிங்கம்புணரி யூனியனில் உள்ள ஊராட்சிகளில் குளியல் தொட்டி, மினி மோட்டார், பேவர் பிளாக் சாலை, பயணிகள் நிழற்குடை, கைப்பம்பு அமைத்தல், தார்சாலை உள்ளிட்ட திட்டப்பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கவுன்சிலர் உதயசூரியன் பேசும்போது, எஸ்.எஸ்.கோட்டை பகுதியிலுள்ள வடக்கு ஊருணியில் கடந்த சில வாரங்களாக மீன்கள் அதிக அளவில் செத்து மிதக்கின்றது. மீன்களின் திடீர் இறப்பிற்கு காரணம் தெரியவில்லை. இதனால் இப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றார். யூனியன் தலைவர் திவ்யா பிரபு பேசும்போது, சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஆடு மற்றும் மாடுகளின் சாணங்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் விவசாயத்திற்கு இயற்கை உரம் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் அதிக விலைக்காக சாணம் விற்பனை செய்வது வருந்தத்தக்கது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில் துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், கவுன்சிலர்கள் கலைச்செல்வி அன்புச் ெசழியன் பொறியாளர்கள் செல்லையா, சிவகுமார் ஒன்றிய அலுவலக பணியாளர் அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story