போலந்து நாட்டில் இறந்த வாலிபரின் உடலை மீட்கக்கோரி மனு
போலந்து நாட்டில் இறந்த வாலிபரின் உடலை மீட்கக்கோரி மனு கொடுத்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த பஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயமு 28). இவரது மனைவி சிவகாமி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சதீஷ்குமார் போலந்து நாட்டில் உள்ள உணவகம் ஒன்றில் வேலைக்காக சென்றார். கடந்த ஒரு வார காலமாக அவர் வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளவில்லையாம். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்திய வெளியுறவுத்துறையினர் சதீஷ்குமாரின் தந்தை வீரபாண்டியை தொடர்பு கொண்டு சதீஷ்குமார் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சதீஷ்குமாரின் மனைவி சிவகாமி, அவரது குடும்பத்தினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணனிடம், சதீஷ்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story