அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.7 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.7 லட்சம் பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.7 லட்சம் பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
வெம்பக்கோட்டை அருகே உள்ள சூரார்பட்டி பகுதியில் அனுமதியின்றி யாரும் பட்டாசு தயாரிக்கிறார்களா என சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அந்த பகுதியில் உள்ள வேலுசாமி மகன் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சிறப்பு ஆய்வுக்குழுவை சேர்ந்த வெம்பக்கோட்டை தனி தாசில்தார் ரங்கசாமி தலைமையில், சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் குமரேசன், விருதுநகர் தீயணைப்பு தடுப்புக்குழு நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ரூ.7 லட்சம் பட்டாசு பறிமுதல்
அப்போது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்பட்டதும், 28 சோர்சா சரவெடி பட்டாசுகள் 60 கிலோ அனுமதியின்றி இருப்பு வைக்கப்பட்டிருந்ததையும் ஆய்வின் போது கண்டறியப்பட்டது.
சூரார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமராஜ் முன்னிலையில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பட்டாசு ஆலையின் உரிமையாளர் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story